ETV Bharat / state

முல்லைப்பெரியாறு; கேரளப்பகுதிக்கு கூடுதலாக 3,119 கன அடி நீர் திறப்பு! - முல்லைப் பெரியாறு

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் அளவுக்கு தேக்கி வைக்கும் நிலை இருந்தும் ரூல்கர்வ் முறைப்படி 10ஆம் தேதி வரை 137.05 அடி அளவுக்கு நீரைத்தேக்கக்கூடிய சூழலால் கேரளப்பகுதிக்கு நீர் கூடுதலாக திறக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 7, 2022, 6:20 PM IST

முல்லைப்பெரியாறு அணை 152 அடி உயரமுள்ளது. இதில், 136 அடி வரை நீரைத்தேக்கி வைக்கக்கூடிய சூழலை அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தி 142 அடி வரை நீரைத்தேக்கி வைக்கலாம் என உயர் நீதிமன்ற உத்தரவினைப்பெற்றுத் தந்தது. இதனால், 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் முறைப்படி தான் நீரை தேக்கி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் ரூல் கர்வ் (Rule Curve) என்ற முறைப்படி, முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்து நீர் மட்ட உயரம் 136 அடியைத் தாண்டியது. இத்தைகைய சூழலில் அணையில் 138.25 அடி அளவிற்கு நீர் மட்டம் உள்ளது. இதனிடையே அணைக்கு விநாடிக்கு 5,125 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து தமிழ்நாடு பகுதிக்கு 2,122 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 137.05 அடி நீர் மட்டுமே அணையில் தேக்கி வைக்க முடியும் என்ற சூழலில், கேரள பகுதிக்கு 10 ஷட்டர்கள் வழியாக நீர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்.6) முதல் திறந்துவிடப்பட்டது. நேற்று காலை முதல் விநாடிக்கு 2,228 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று (ஆக.7) காலை 10 மணிக்கு 2,754 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

தற்போது அணையின் நீர் மட்டத்தை மேலும் குறைக்கும் வகையில் 10 ஷட்டர்களில் உள்ள 3 ஷட்டர்களில் இருந்து 0,5 மீட்டர் அளவிற்கு உயர்த்தி, அதன் மூலம் கூடுதலாக 3,119 கன அடி நீர் அணையில் இருந்து கேரள பகுதிக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு

இவ்வாறு திறந்து விடப்படும் நீரானது வல்லகடவு, சப்பாத்து பகுதியில் உள்ள ஆற்றின் வழியாக சென்று, இடுக்கி அணையினை அடையும். இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்குக் கூடுதலாக நீர் திறப்பதனால் வல்லகடவு, சப்பாத்து ஆகியப்பகுதிகளில் முல்லைப்பெரியாற்றின் இருகரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.