ETV Bharat / state

பயிற்சி மருத்துவர், செவிலியர் உள்பட ஒரே நாளில் 292 பேருக்கு கரோனா

தேனி: பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மதுபானக் கடை விற்பனையாளர் உள்பட ஒரே நாளில் 292 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Theni Corona status
தேனி கரோனா நிலவரம்
author img

By

Published : Aug 4, 2020, 10:45 PM IST

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு பயிற்சி மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், தேனி ஆயுதப்படை காவலர், போடி தாலுக்கா காவல்நிலைய காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர், கோகிலாபுரம் கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், ஆண்டிபட்டி பேரூராட்சி குடிநீர் விநியோக பணியாளர், டி.சுப்புலாபுரத்தில் செயல்படும் அரசு மதுபானக் கடை விற்பனையாளர் என இன்று ஒரே நாளில் 292 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 261 என உயர்ந்துள்ளது. போடியைச் சேர்ந்த 58 வயது நபர், பெரியகுளத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் மற்றும் தேனியைச் சேர்ந்த 45 வயது நபர் என நான்கு பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் போடி - 68, பெரியகுளம் - 56, சின்னமனூர் - 47, தேனி - 45, கம்பம் - 35 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தற்போது வரை 3 ஆயிரத்து 498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 691 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்தவர்கள் என 2 ஆயிரத்து 260 நபர்களின் ரத்த மாதிரிகள் இன்று (ஆகஸ்ட் 4) ஒரே நாளில் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம்: துணை முதலமைச்சர் திடீர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.