ETV Bharat / state

2ஆவது முறையாக முல்லை பெரியாற்றின் 18ஆம் கால்வாய் திறப்பு!

தேனி: உத்தமபாளையம், போடி தாலுக்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதிபெற முல்லை பெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கான தண்ணீரை இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

18th-canal-extn-place-water-opened
author img

By

Published : Nov 19, 2019, 5:24 PM IST

தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் முல்லைப் பெரியாற்றிலிருந்து பதினெட்டாம் கால்வாய் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. முல்லை பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர்கேம்ப்-ல் இருந்து தேவாரத்தில் உள்ள சுத்த கங்கை ஒடை வரை கால்வாய் வெட்டப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தால் போடி தாலுகா விவசாயிகள் பயடையும் வகையில் கூவலிங்க ஆறு வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து 18ஆம் கால்வாய் நீட்டிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்தாண்டு சோதணை ஓட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தாண்டு பெய்த பருவமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தே காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 18ஆம் தேதி முல்லை பெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு தேவாரம் சுத்தகங்கை ஓடையை சென்றடைந்தது.

இதனையடுத்து தமிழ்நாடுஅரசின் உத்தரவுப்படி இரண்டாவது முறையாக இன்று 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கான தண்ணீரை தேவாரம் சுத்தகங்கை ஓடையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்.

2ஆவது முறையாக முல்லை பெரியாற்றின் 18ஆம் கால்வாய் திறப்பு

வினாடிக்கு 95 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 121 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் உள்ள 585 கிணறுகள் நிலத்தடி நீர் செரிவுபடுவதுடன், 3848.55 ஏக்கர் நிலங்களுக்கும், ஏழு குளங்களின் கீழ் உள்ள 946.16 ஏக்கர் நிலங்களும் மொத்தம் 4794.71 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காயத்ரி ரகுராம் மீது விசிகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு!

Intro:          18ஆம் கால்வாயில் இருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு. உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் உள்ள பாசன நிலங்களுக்கு 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதியில் தேனி மாவட்ட ஆட்சியர் தண்ணீர் திறந்து வைத்தார்.
Body: தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் முல்லைப் பெரியாற்றிலிருந்து பதினெட்டாம் கால்வாய் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. முல்லை பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர்கேம்ப்-ல் இருந்து தேவாத்தில் உள்ள சுத்த கங்கை ஒடை வரை கால்வாய் வெட்டப்பட்டது. இதனையடுத்து போடி தாலுகா விவசாயிகள் பயடையும் வகையில் கூவலிங்க ஆறு வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து 18ஆம் கால்வாய் நீட்டிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்தாண்டு சோதணை ஓட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தாண்டு பெய்த பருவமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தே காணப்பட்டது. இதனைத் தொடர்;ந்து யடுத்து கடந்த மாதம் 18ஆம் தேதி முல்லை ஆற்றில் இருந்து 18ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு தேவாரம் சுத்தகங்கை ஓடையை சென்றடைந்தது. இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவுப்படி இரண்டாவது முறையாக இன்று 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கான தண்ணீரை தேவாரம் சுத்தகங்கை ஓடையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்.
வினாடிக்கு 95 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 121 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் உள்ள 585 கிணறுகள் நிலத்தடி நீர் செரிவுபடுவதுடன், 3848.55 ஏக்கர் நிலங்களுக்கும், ஏழு குளங்களின் கீழ் உள்ள 946.16 ஏக்கர் நிலங்களும் மொத்தம் 4794.71 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன.
Conclusion: இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இரண்டாவது முறையாக 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீரால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.