தமிழ்நாட்டில் 01.01.2020ஐ தகுதி நாளாகக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தேர்தல் ஆனையத்தால் வெளியிடப்பட்டது. இதனிடையே தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம்(தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பல்லவி பல்தேவ் வெளியிட, அதனை தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சார் ஆட்சியர், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
இந்தப் பட்டியலில், 5 லட்சத்து 38 ஆயிரத்து 409 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 55 ஆயிரத்து 647 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 171 பேரும் என மொத்தமாக 10 லட்சத்து 94 ஆயிரத்து 227 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சட்டமன்றத் தொகுதிவாரியான வாக்காளர்கள் பட்டியல்:
தொகுதி | ஆண்கள் | பெண்கள் | இதர வாக்காளர்கள் | மொத்தம் |
ஆண்டிப்பட்டி | 1,33,915 | 1,36,323 | 25 | 2,70,303 |
பெரியகுளம்(தனி) | 1,35,374 | 1,39,794 | 96 | 2,75,264 |
போடிநாயக்கனூர் | 1,32,467 | 1,37,029 | 19 | 2,69,515 |
கம்பம் | 1,36,653 | 1,42,461 | 61 | 2,79,145 |