ETV Bharat / state

மோடி - ஜி ஜின்பிங்கை வரவேற்கும் பேரணி

காஞ்சிபுரம்: இந்திய பிரதமர்-சீன அதிபர் வருகையை முன்னிட்டு அவர்களை வரவேற்கும்விதமாக மாமல்லபுரத்தில் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் மாணவர்களின் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது.

students rally
author img

By

Published : Oct 9, 2019, 2:47 PM IST

Updated : Oct 11, 2019, 12:07 PM IST

மாமல்லபுரத்தில் 11, 12 ஆகிய தினங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக அவர்களை வரவேற்கும்விதமாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபரின் படங்கள் பதித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள நீண்ட நெடுங்கால நட்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் செய்திருந்தார். தற்போது சீன அதிபரின் வருகை தமிழ்நாட்டிற்கும் சீனாவுக்குமிருந்த பழைய நட்பை மேம்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

பள்ளி மாணவ மாணவிகளின் பேரணி

மேலும் இருநாட்டுத் தலைவர்களையும் வரவேற்கும் வகையில் அறிக்கைகள் கொடுத்திருக்கின்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு

Intro:இந்திய பிரதமர் சீன அதபர் வருகையை முன்னிட்டு அவர்களை வரவேற்கும் விதத்தில்  மாமல்லபுரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாணவர்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
Body:

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் 11, 12, ஆகிய இரண்டு தினங்கள் இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது இதற்காக அவரை வரவேற்கும் விதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பள்ளி மாணவர்களின்

அணிவகுப்பு நடைபெற்றது பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் படங்கள் பதித்த பதாகைகளை மாணவர்கள் கையில்  ஏந்தியபடி முக்கிய வீதி வழியாக வந்த பேரணி பேரூராட்சி அலுவலகம் அருகே முடிவுற்றது

இதனை தொடர்ந்து  செய்தியாளரிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள நீண்ட நெடுங்கால நட்பை வலுப்படுத்தக்கூடிய வகையில் பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் செய்திருந்தார் தற்போது சீனா அதிபர் இந்தியாவுக்கு வருகைதரவுள்ளார் அவர் வருகை தரும் போது தமிழகத்திற்க்கும் சீனாவுக்கு இருந்த பழைய நட்பை மேம்படுத்தும் வகையிலும் நினைவுகூடும் வகையிலும் சீன அதிபர் மாமல்லபுரத்திற்க்கு வருகை தர உள்ளார் 

இந்த வருகைக்கு பிறகு இரு நாட்டின் கலாச்சார பண்பாடு வணிக அனைதௌது துறை சேர்ந்த பணிகளும் முன்னேற்றமடையும் என கூறினார் மேலும் 

மாமல்லபுரத்தில் வருகை தரும் பிரதர் மோடி மற்றும் சீன அதிபர் வருகை தரும் தேதி தொடர்பான கேள்விக்கு 11 ஆம் தேதி முதல் 12 தேதி வரை மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி உள்ளதாக கூறினார்

Conclusion:மேலும் இருநாட்டு தலைவர்களையும் வரவேற்கும் வகையில் அறிக்கைகள் கொடுத்திருக்கின்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் மதிமுக தலைவர் வைகோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
Last Updated : Oct 11, 2019, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.