ETV Bharat / state

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - நீலகிரி செய்திகள்

நீலகிரி : குன்னூர் குன்னக்கொம்பை எஸ்டேட் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி பெண் பலி!
மின்சாரம் தாக்கி பெண் பலி!
author img

By

Published : May 8, 2020, 10:12 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது குன்னக்கொம்பை கிராமம்‌. அங்கு ஆலாடா பகுதியில் நிரந்தரமாகவும் ஒப்பந்ததாரர்களாகவும் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றார்.

இந்நிலையல், எஸ்டேட் நிர்வாக குடியிருப்பில் மின் கம்பி அறுத்து விழுந்திருப்பதை அறியாமல் அவ்வழியே சென்ற மங்கம்மா, சரண்யா, திருப்பதி ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மங்கம்மா(20) உயிரிழந்தார்.

மேலும், படுகாயம் அடைந்த சரண்யா, திருப்பதி ஆகியோர் குன்னூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கையில், எஸ்ட்டேட் நிர்வாகத்தினர், மின்சாரத் துறையினரின் அலட்சியத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மின்சாரம் தாக்கி பெண் பலி!

இதையும் பார்க்க: ஜம்முவில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.