Woman crushed under tipper wheels: ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி துரைசாமி - ஜானகி (50). இவர்கள் சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முள்ளூர் பகுதியில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல துரைசாமி முயன்றுள்ளார். எதிர்புறமாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர்.
இதனால் துரைசாமியின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் அவரது மனைவி ஜானகி டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஜானகியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது கணவர் துரைசாமியை அழைத்துச் சென்றனர்.
இதனிடையே டிப்பர் லாரியை ஓட்டுநர் கார்த்திக், எதிர்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கோத்தகிரி பகுதியில் டிப்பர் லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: ராணுவத்தில் மூன்று மகன்கள்; திருநெல்வேலி பெண்மணிக்கு வீரத்தாய் விருது!