நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், தற்போது மூன்று காட்டுயானைகள் சாலையில் உலா வருகின்றன. இதில் ஒரு ஆண் காட்டு யானை தனியாகப் பிரிந்து சாலையோரப் பகுதிகளில் உணவு , தண்ணீருக்காக உலாவுகிறது.
இதற்கிடையே, காட்டேரி தோட்டக்கலைப் பண்ணையில் வேலியை உடைத்து யானை உள்ளே புகுந்தது. இதனால் தோட்டக்கலைப் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர்ந்து, வனச்சரகர் சசிகுமார் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர் மகேஷ், வனக்காவலர் ராம்குமார், வேட்டைத் தடுப்புக் காவலர் லோகேஸ்வரன் ஆகியோர் அப்பகுதியில் யானையை விரட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த யானை அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்; வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்தி யானையை புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தற்போது தேசிய நெடுஞ்சாலையில், சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதால் இந்த காட்டு யானைகள் திசை மாறி இடம் தெரியாமல் சென்று வருகிறது.
இதையும் படிங்க...திருநங்கைகளின் பசுமை வீடு... சுயம்பாய் வாழ வழிகாட்டிய தூத்துக்குடி ஆட்சியர்!