நீலகிரி மாவட்டம் குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்துக்குள் ஏராளமான காட்டெருமைகள் சென்றுவருகின்றன.
வெடிமருந்து தொழிற்சாலை நுழைவுவாயிலில் இன்று (அக். 31) பத்திற்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வந்துள்ளன. இதைக்கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் தொழிற்சாலையின் கேட்டை அடைத்து உள்ளேயே நின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் குன்னூரில் காட்டெருமை தாக்கி ஒருவர் பலியானார், மேலும் ஒருவர் அருவங்காடு பகுதியில் காட்டெருமை தாக்கி தற்போது படுகாயமடைந்து கோயம்புத்தூரில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்தப் பகுதிகளை வனத் துறையினர் ஆய்வுசெய்து சுற்றுப்புறப் பகுதிகளில் காட்டெருமைகள் வருவதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'காதலன் வருவான் என்னை கூட்டிப்போக...' தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!