கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ளது அட்டமலை வனப்பகுதி. இங்குள்ள வனத்தையொட்டியப் பகுதிகளில் ஏராளமான தனியார் உயர் ரக சொகுசு விடுதிகள் உள்ளன. இங்குள்ள விடுதிகளில் ஏராளமான பழங்குடியினர்கள் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு அட்டமலை பகுதிக்கு துப்பாக்கிகளுடன் வந்த மாவோயிஸ்ட்கள் ஒரு தனியார் விடுதியை கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் நடைபெற்ற நிலையில் அதன் பணியாளர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்கள், விடுதியின் முகப்பில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில், கேரள அரசு பழங்குடியினர்களுக்கு எதிராக செயல்படுகிறது. பழங்குடியினர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சேகரிக்கும் வனப்பொருட்களான தேன் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களை அபகரித்து தனியார் சொகுசு விடுதிகள், அதனைச் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
மேலும், சில விடுதிகளில் பழங்குடியினர் அடிமைகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. பழங்குடியினர்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு - கேரள எல்லையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ஆட்டோவில் கூந்தலைத் திருடிய 'கார்குழல் காதலன்'