நீலகிரி: குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வன விலங்குகள் சாதராணமாக குடியிருப்புப் பகுதிகளில் உலா வருகின்றன. மேலும் இரவு நேரங்களில், சாவகாசமாக அதிகம் நடமாடிவருகின்றன.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 8) இரவு, குன்னூர் கரிமரா பகுதியில், பிரகாஷ் என்பவரின் பங்களா வளாகத்தின் வெளியே கரடிகளும், சிறுத்தையும் உலா வரும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டு, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் மீண்டும் இந்தப் பகுதிக்கு சிறுத்தை வந்தால் கூண்டுவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சில்லக்குடி ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்!