நீலகிரி: குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் 13-வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவதைப் பயணி ஒருவர் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழத் தொடங்கின.
நூலிழையில் வாகன ஓட்டிகள் உயிர் தப்பிய நிலையில், மரங்கள், பாறைகள் விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முழு விவரம்: குஜராத், ஹிமாச்சலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு