ETV Bharat / state

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - மேற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் கட்டாரி

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை நிர்வாகம் அடாவடி போக்கை கடைபிடிப்பதாக, அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Nilgiri
நீலகிரி
author img

By

Published : Aug 10, 2023, 8:25 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகம் சில அடாவடி போக்குகளை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில், இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நேற்று (ஆகஸ்ட் 9) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய சிந்தனை செல்வன், “நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் தொழிற்சாலைகளில் எஞ்சி இருப்பது அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மட்டுமே. ஆனால், தற்போது அதையும் இழுத்து மூடுவதற்கு அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதே போன்று, வெடி மருந்து தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு அனைத்தும் வட மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. மேலும், திட்டமிட்டு தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது” என கூறினார்.

இதையும் படிங்க: Flat வாங்கப் போறீங்களா? - இதைப்படிங்க முதலில்..! கட்டட தரத்தை உறுதி செய்வது எப்படி? சட்டத்தீர்வு என்ன?

மேலும், தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகள் வெளியில் தெரியாமல் மூடி மறைப்பது ஏன் என்றும், முறையான புலனாய்வு செய்யப்படாமல் தமிழ்நாடு காவல் துறையை தொழிற்சாலை நிர்வாகம் தடுப்பது ஏன் எனவும், அதுமட்டுமல்லாமல், தரம் அற்ற மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதால் அளவிற்கு அதிகமான ஆலைக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, காற்று மற்றும் நீர் ஆகியவை மாசுபடுகிறது என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில துணைச் செயலாளர் முனி ரத்தினம், மண்டல துணைச் செயலாளர் அருண் மண்ணரசன், நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சுதாகர், மேற்கு மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன் கட்டாரி, முன்னாள் மாவட்டச் செயலாளர் சகாதேவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காவல் துறையினர் தரப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: காய்ந்து வெடிக்கும் நிலம்... களை எடுக்கவும் முடியவில்லை என விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.