உதகை: சமீப காலமாகப் பருவ நிலை மாற்றம் காரணமாக எதிர்பாராத விதமாக அளவுக்கு அதிகமான மழை, வெயில் எனப்பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்வதால் கடும் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மண் அரிப்பு, நிலச்சரிவு என பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதனையடுத்து மாறி வரும் காலநிலையால் ஏற்படும் பாதிப்புகளைக்குறைத்து விவசாய நிலங்கள் மற்றும் மண் வளத்தைப் பாதுகாக்க இனி வரும் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மாற்றும் ஆராய்ச்சிகள் குறித்த 2 நாள் கருத்தரங்கு உதகையில் தொடங்கி உள்ளது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோனேசியா உள்ளிட்டப் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சியாளர்கள் உள்பட நூற்றும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் கலந்துரையாடி வருகின்றனர். இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் கருத்துகள் விரைவில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரையாக வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: Rahul Gandhi party in Nepal: திருமண பார்ட்டியில் பங்கெடுப்பது குற்றமா? பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி!