நீலகிரி: குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியாகக் காணப்படும். இந்த சாலையை ஒட்டி புதுக்காடு, கோழிக்கரை, குரும்பாடி போன்ற பழங்குடியின கிராமங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
பழங்குடியின மக்கள் மருத்துவ வசதிக்காகவும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும் குன்னூர் அல்லது மேட்டுப்பாளையம் நகரப் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்திற்குப் பெரும்பாலும் அரசுப் பேருந்தை நம்பியுள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இவர்களுக்குப் பர்லியார் பகுதியில் மட்டுமே பேருந்துகள் நிறுத்தப்படுவதால், அங்கிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே தங்கள் கிராம பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் வனவிலங்குகளின் தொந்தரவும் உள்ளது.
எனவே, அரசுப் பேருந்துகள் தங்களது பகுதியிலுள்ளப் பேருந்து நிறுத்தங்களில் பழங்குடியினரை ஏற்றிச் செல்ல வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரிப் பேருந்தை மறித்து டான்ஸ் ஆடிய போதை பாய்ஸ் - கப் ஐஸ் அடித்த போலீஸ்