நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பம்பலக்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 42 குடும்பம் தைலம் உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக சென்ற ஏழு மாதமாக வேலையின்றி தவித்துவருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வாங்கி கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது காலநிலை மாற்றம் காரணமாக யூகலிப்டஸ் மரங்களில் இலைகள் அனைத்தும் கொட்டியதால், தற்போது தைலம் காய்ச்சும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பழங்குடியினர் லிங்கன் கூறுகையில், "பழங்குடியின மக்களான எங்களின் வாழ்வாதாரம் இந்தக் காலச்சூழலில் தைலம் காய்ச்சும் தொழிலை சார்ந்து இருந்தது. தற்போது காலநிலை மாற்றம் காரணமாக யூகலிப்டஸ் மரங்களில் இலைகள் அனைத்தும் கொட்டி மரங்கள் காய தொடங்கியுள்ளன.
இதனால் தைலம் காய்ச்சும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு உதவ வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒடிசா பழங்குடியின இளைஞர் தயாரித்த பெட்ரோல் ஏடிஎம்!