நாடு முழுவதும் பழங்குடியின மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கின்றன. அந்தத் தொகையைக் கொண்டு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தண்ணீர் இணைப்பு, சாலை வசதி, சமுதாயக் கூடம் எனப் பழங்குடியின கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகின்றன.
பஞ்சாயத்து நிர்வாகத்தின் தலைமையில் அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள சேம்புக்கரை பழங்குடியின கிராமம் உள்ளது.
இங்கு குரும்பர் இன பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்தப் பகுதியில் நடை பாதை மிகவும் சேதமடைந்தது காணப்படுகிறது. இவர்கள் மண்ணால் ஆன வீடுகளில் தங்கிவருகின்றனர்.
மழைக் காலங்களில் மண் வீடு இடிந்து விழுவதால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர். பழங்குடியின குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி முறை குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லாததால் இவர்களின் கல்வித்தரம் வெகுவாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டி பணிகள் இன்றளவிலும் நிறைவுபெறாமல் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் திடீரென ஏற்பட்ட குழியில் சிக்கிய லாரி!