நீலகிரி: கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் மற்றும் இரவு நேரங்களிலேயே யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
இந்நிலையில் இன்று கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்றை முள்ளூர் என்னும் இடத்தில் வழிமறித்த காட்டுயானை ஒன்று திடீரென பேருந்து கண்ணாடியை தும்பிக்கையால் உடைக்க முயற்சித்தது. இதனைப் பார்த்து பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இதனைத்தாெடர்ந்து சாலையில் நின்ற லாரியை யானை தூக்க முயற்சித்தது. அது முடியாமல் போகவே சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டுப் பின் அருகில் இருந்த புதர் செடிக்குள் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியில் துரத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது