ETV Bharat / state

சொந்தக் கோயில் பூஜையில் தகராறு.. ஜி.பி.முத்து நடுத்தெருவில் வாக்குவாதம்.. வைரலாகும் வீடியோ! - GP Muthu viral fight Video

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைத்தளப் பிரபலம் ஜி.பி.முத்து, கோயில் விஷயம் தொடர்பாக வீதியில் நின்று தகாத வார்த்தைகளைக் கூறி சண்டையிடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஜிபி முத்து
ஜிபி முத்து (Credits - G.P.Muthu Instagram Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 9:25 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் சமூக வலைத்தள பிரபலம் ஜி.பி.முத்து மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கோயிலாகும். இந்தக் கோயிலுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார்.

மேலும், தமிழ் மாதத்தின் முதல் நாள் இந்தக் கோயிலில் பூஜை நடைபெறும். அப்போது ஜி.பி.முத்துவும் சில மாதங்களில் பங்கேற்பார். அதேபோல், இந்தக் கோயிலுக்கு பூஜை செய்து வரும் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்களும் பங்கேற்பர். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால், அந்தக் கோயிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை செய்வதற்காக வந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து, மகேசை இந்த கோயிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் ஜி.பி.முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் தகாத வார்த்தைகளால் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.