ETV Bharat / state

சாலை விபத்தில் மூளைச்சாவு: 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்.. அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி! - Chennai organ donation - CHENNAI ORGAN DONATION

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் இளைஞர் சுரேஷின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் இளைஞர் சுரேஷ் உடலுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுரேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டீன் தேரணிராஜன்
சுரேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டீன் தேரணிராஜன் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 10:37 AM IST

சென்னை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் இளைஞர் சுரேஷ் என்பவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, "திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞர் சுரேஷ். இவர் ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். ஆந்திர மாநிலம், நகரியில் கடந்த 15-ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்துள்ளார். அவருக்கு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு பலத்துறைகளை சேர்ந்த மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 17-ஆம் தேதி மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து, சுரேஷின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது தந்தையும், சகோதரிகளும் முன்வந்தனர்.

இதையும் படிங்க: "உடலுறுப்பு தான திட்டம் மிகவும் சவாலானது" - மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுவது என்ன?

அவர்களின் விருப்பத்தின் பேரில் , சுரேஷின் இதயம், இதய வால்வு, நுரையீரல், இரு சிறுநீரகங்கள், கால் எலும்பு, கல்லீரல், விழி வெண்படலம் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. அதில் இதயம், கால் எலும்பு, ஒரு சிறுநீரகம் உள்ளிட்டவை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பெறப்பட்டன. மற்ற உறுப்புகள் தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல் படி தகுதியின் அடிப்படையில் பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன" என தெரிவித்தாா்.

முன்னதாக, உறுப்புகளை தானமாக அளித்து பலருக்கு வாழ்க்கையளித்த சுரேஷ் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அணிவகுப்பு மரியாதை நடத்தி, அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் , சென்னை காசிமேடு, ராயபுரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (30) கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் காயமடைந்து, அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 11-ஆம் தேதி இரவு உயிரிழந்தார். குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்த நிலையில் பிரேம்குமாரின் சிறுநீரகங்கள் உறுப்பு தானமாக அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.