நீலகிரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ’உப்பு ஹட்டுவ’ பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகையையொட்டி நேற்று (மார்ச் 24) காலை படுகர் இன மக்கள் அவரவர் வீட்டிலிருந்து உப்பு, பச்சைக் கடலை, புல் வகைகள் என கொண்டு வந்து அவற்றை ஆற்றில் கரைத்தனர்.
பொதுவாக இப்பண்டிகையின்போது தண்ணீரை மாடுகளுக்கென்று வடிவமைக்கப்பட்ட கல்லில் ஊற்றி அவற்றுக்கு தண்ணீர் கொடுத்து, அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, பின் காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கவட்டை இலை, நெறி செடிகளை வீட்டிற்கு கொண்டு சென்று வீட்டின் முற்றத்தில் செடிகளை தொங்கவிட்டால் நோய் நொடி இல்லாமல் இருக்கும் என்பது ஐதீகம்.
மாடுகள் உப்பு தண்ணீர் குடிப்பதால் அவை காலை முதல் இரவு வரை எங்குச் சென்றாலும் வீட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில் தான் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் வீட்டில் பாயாசம் வைத்து ஊர் பொதுமக்கள் கூப்பிட்டு ஒவ்வொரு வீட்டிலும் கொடுப்பார்கள். படுகர்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த 'உப்பு ஹட்டுவ' பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: படுகர் இன மக்களின் பூ குண்டம் ஹெத்தையம்மன் திருவிழா!