கரோனா பொதுமுடக்கத்தால் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனை நம்பி பிழைப்பு நடத்தி வந்த மக்கள் ஐந்து மாத காலமாக பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டன.
மாவட்டம் முழுதும் 200 சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் நிலையில், பூங்காக்களில் பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்படுகிறது.
குன்னூர் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவுவதாலும், சிம்ஸ் பூங்கா பசுமையாக காட்சியளிப்பதாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கையை ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர்.
இங்கு, தெர்மல் ஸ்கேன் கருவியால் காய்ச்சல் அறிகுறி பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
175 நாள்கள் வீடுகளில் முடங்கியிருந்த நிலையில் தற்போது இந்த பசுமை நிறைந்த காட்சிகள் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திலிருந்து 173 கேள்விகள்