நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அங்குள்ள கேண்டீனில் பயணிகள் குடிநீர், உணவு பொருள்களை வாங்கி வந்தனர்.
தற்போது கேண்டீன் டெண்டர் விடப்படவில்லை. மேலும், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்காலுக்கு எள், கடலை சாகுபடிக்காக நீர் திறப்பு