சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. கேரளாவில் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேரளாவிலிருந்து நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். இவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனவும் அதனை தடுக்கும் விதமாகவும் கூடலூர் எல்லையிலுள்ள பாட்டவயல், தாளூர் நம்பியார்குன்னு, நாடுகானி, சோலாடி ஆகிய ஐந்து சோதனைச் சாவடிகளில் கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் சுகாதாரக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், அவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க...கரோனா உயிரிழப்பு 492ஆக உயர்வு!