தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கரோனவை கட்டுபடுத்தும் விதமாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுடன் ஆலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது.
அப்போது, அவர் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை முதல் மூடப்படும். சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்படும். மேலும், மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் தேவை. அதனை கண்காணிக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வருவாய் துறை, காவல் துறையைக் கொண்ட சிறப்பு குழு நியமிக்கபடும். ஆனால், தனியார் காட்டேஜ்கள் திறந்திருக்கும், கரோனா சிகிச்சையை மேற்கொள்ள விரும்புவர்கள் தனியார் இடங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று சிகிச்சை பெறலாம். மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான அளவு உள்ளது. கரோனா தடுப்பு மருந்துகள் 1800 டோஸ் கையிருப்பில் உள்ளது’’ என்றார்.
இதையும் படிங்க: கரோனா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க சிவசேனா வலியுறுத்தல்