நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் சுற்றுலா பயணிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 50 விழுக்காடு சுற்றுலா பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் இ பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.