தஞ்சாவூரைச் சேர்ந்த கணேஷ் பாபு (35) என்பவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், கணேஷ் அப்பகுதியில் உள்ள 500 அடி பள்ளத்தாக்கில் திடீரென மேலேயிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை, குன்னூர் காவல் துறை அலுவலர்கள் அடர்ந்த வனப்பகுதி என்றும் பாராமல் உடலைத் தேடி கண்டுபிடித்து, உடற்கூறு ஆய்விற்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிந்த காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணேஷ் பாபுவிற்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய மேலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.