ETV Bharat / state

நாட்டைக் காக்க கிளம்பிய வீரர்கள் - Coonoor

நீலகிரி: குன்னூர் ராணுவப் பயிற்சி முகாமில் 274 வீரர்கள் சத்தியப் பிரமாணம் ஏற்று அனுப்பப்பட்டுள்ளனர்.

குன்னூர் ராணுவ பயிற்சி முகாம்
author img

By

Published : Jun 15, 2019, 5:57 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கு பணிபுரிய அனுப்பப்படுகின்றனர். இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சிபெற்ற 274 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் பேரக்சில் நடைபெற்றது.

பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக்கொடி மீதும் ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மேலும் வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும் நடைபெற்றது.

இந்நிலையில் மரியாதையை ஏற்றுக்கொண்ட பயிற்சி முகாம் தலைவரான கமாண்டர் ஆர்.எஸ். குரையா தனது உரையில் “நாட்டின் எல்லை காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நாட்டை காப்பாற்ற கிளம்பிய வீரர்கள்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக அணி வகுத்துவந்த காட்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தனர். மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கிய, ஆறு வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro: குன்னூர் ராணுவ பயிற்சி முகாமில் 274 வீரர்கள் சத்திய பிரமாணம் ஏற்று நமது நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டனர் குன்னுார், வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில், 274 ராணுவ வீரர்களை எல்லை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சிநடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கும் பணி புரிய அனுப்பப்படுகின்றனர்.இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சி பெற்ற, 274 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி  வெலிங்டன் பேரக்ஸில் நடந்தது. பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, ராணுவ வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு .மரியாதையை ஏற்றுக் கொண்ட, பயிற்சி மைய தலைவரான கமாண்டர் ஆர்.எஸ். குரையா தனது  உரையில் “நாட்டின் எல்லை காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக, அணி வகுத்து வந்த காட்சியை கண்டு பெருமிதம் அடைந்தனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, 6 வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Body: குன்னூர் ராணுவ பயிற்சி முகாமில் 274 வீரர்கள் சத்திய பிரமாணம் ஏற்று நமது நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டனர் குன்னுார், வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில், 274 ராணுவ வீரர்களை எல்லை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சிநடந்தது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கும் பணி புரிய அனுப்பப்படுகின்றனர்.இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சி பெற்ற, 274 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி  வெலிங்டன் பேரக்ஸில் நடந்தது. பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, ராணுவ வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு .மரியாதையை ஏற்றுக் கொண்ட, பயிற்சி மைய தலைவரான கமாண்டர் ஆர்.எஸ். குரையா தனது  உரையில் “நாட்டின் எல்லை காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக, அணி வகுத்து வந்த காட்சியை கண்டு பெருமிதம் அடைந்தனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, 6 வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.