ETV Bharat / state

தொடரும் சிறுத்தையின் அட்டகாசம் மக்கள் பீதி!

ஊட்டி: குடியிருப்புப் பகுதியில் புகுந்து கால்நடைகள் வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுத்தையின் அட்டகாசம்
author img

By

Published : Jul 4, 2019, 12:57 PM IST

Updated : Jul 4, 2019, 1:25 PM IST

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்தோமா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட விலங்குகளை அந்த சிறுத்தை வேட்டையாடி உள்ளது.

சிறுத்தையின் தாக்குதலில் பலியான ஆடு

இதனால் பீதியடைந்த கிராம மக்கள் கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:OotyBody:நகரப் பகுதிக்குள் புகுந்து ஒரே வாரத்தில் 10 மாடு ஆடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கடித்து கொன்ற சிறுத்தை . இன்றும் ஒரு மாட்டை கடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் பீதி . அப்பகுதியில் சுற்றி திரிவதால் வெளியில் வர முடியாமல் தவிப்பு. வனத்துறை மெத்தனம் காட்டுவதாக குற்றசாட்டு .
----------------
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்தோமா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்கள் ஆடு, மாடு போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அதிகாலையில் வரும் சிறுத்தை ஆடுகள், மாடுகள், கோழி , நாய் போன்றவற்றை கடித்து கொன்று வேட்டையாடி வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை கடித்து கொன்ற சிறுத்தை மேலும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கோபால் என்பவரது கன்று குட்டியை கொட்டகை உள்ளே புகுந்து கடித்து கொன்றது. அருகில் சிறுத்தை கால் தடம் உள்ள நிலையில் பல தடவை வனத்துறையினக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். காலை நேரத்தில் இந்த சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.Conclusion:Ooty
Last Updated : Jul 4, 2019, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.