ETV Bharat / state

யானை தந்தம் குத்தி வாகனம் கவிழ்ந்த சம்பவம்; இரண்டு பேர் படுகாயம் - two injuried

நீலகரி: கூடலூரில் பால் கொள்முதல் செய்ய சென்ற வாகனத்தை யானை தந்தத்தால் குத்தி கவிழ்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானை தந்தம் குத்தி வாகனம் கவிழ்ந்து
author img

By

Published : Jul 7, 2019, 4:29 PM IST

நீலகரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் சில வாரங்களாக யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருவதும், மனிதர்களை தாக்குவது போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் பால் கொள்முதல் செய்வதற்காக ஜீப் வாகனம் மூலம் அப்பகுதிக்குச் சென்று திரும்பும் போது எதிரே வந்த யானை வாகனத்தை தாக்கியுள்ளது.

திறம்பட செயல்பட்ட ஓட்டுநரும், அருகில் இருந்தவரும் வாகனத்தில் இருந்து கிழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
யானை தாக்கியதில் வாகனம் கவிழ்ந்து அதில் இருந்து 500 லிட்டர் பால் சாலையில் ஆறாக ஒடியது.

யானை தந்தம் குத்தி வாகனம் கவிழ்த்த சம்பவம்; இரண்டு பேர் படுகாயம்

கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் இந்த யானைகளை கட்டுபடுத்தாமல் மெத்தனம் காட்டுவதாகவும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முறையாக அகழிகள் வெட்டவில்லை என கூறி அப்பகுதி மக்கள் கூடலூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வருவாய் கோட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:OotyBody:உதகை 07-07-19

கிராமங்களுக்கு பால் கொள்முதல் செய்ய சென்ற வாகனத்தை தந்தத்தால் குத்தி கவிழ்த்த யானை.
2 பேர் காயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சை . வனத்துறையினரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் .

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வபோது யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருவதும் மனிதர்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள மாடு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்வதற்காக ஜீப் வாகனம் மூலம் அப்பகுதிக்கு சென்று கொள்முதல் செய்து விட்டு காலை திரும்பும் போது. எதிரே வந்த யானை வாகத்தை தாக்கியது. இதனை அறிந்த ஒட்டுனரும் , அருகில் இருந்தவரும் வாகனத்தில் இருந்து கிழே விழுந்து தப்பி காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை காக்கியதில் வாகனம் கவிழ்ந்த நிலையில் அதில் இருந்த 500 லிட்டர் பால் சாலையில் ஆறாக ஒடியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறையினர் இந்த யானைகளை கட்டுபடுத்தாமல் மெத்தனம் காட்டுவதாகவும் யானைகள் ஊருக்கு வருவதை தடுக்க முறையாக அகலி வெட்டவில்லை என கூறி கூடலூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்த சாலை மறியலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தன. பின்னர் வந்த காவல் துறையின் நடத்திய பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாச்சியர் முன்னிலையில் உரிய நடவடிக்கை எடுப்பக உறுதி அளித்த பின்னரே அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.