நீலகிரி : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனுக்கு லேசான கரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் இருந்தபடி சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 561 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரம் என உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 520 என சற்று குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வேலூர் எஸ்பிக்கு கரோனா உறுதி