ETV Bharat / state

நீலகிரியில் முள்ளம்பன்றி கடத்திய மூவர் கைது!

நீலகிரி அருகே வாகண சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கார் ஒன்றை சோதித்த போது அதில் இருந்த உயிரிழந்த முள்ளம்பன்றியை கைப்பற்றியதோடு அதனை எடுத்து வந்த கேரளாவை சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

porcupine died after being hit by a car police arrested three people for kidnapping
கார் மோதி உயிரிழந்த முள்ளம்பன்றியை கடத்தி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
author img

By

Published : Mar 15, 2023, 8:01 AM IST

நீலகிரி: வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில் வனப்பகுதியில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வனப்பகுதியில் செல்லும் சாலைகளில் கடந்து செல்லும் வாகனங்களையும் போலீசார் பரிசோதனை செய்கின்றனர். வனவிலங்குகள் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், மின்வேலிகள், சாலை விபத்துகள், மனிதர்களால் வேட்டையாடப்படுவது போன்றவற்றால் வனவிலங்குகள் அவ்வப்போது உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில் நீலகிரி, சேரம்பாடி அருகே சோலாடி சோதனைச் சாவடியில் போலீசார் வகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் இருந்து நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி வழியாக வைத்திரிக்கு சென்ற KL.46.B.5833 என்ற பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு அவர்கள் மேல் சந்தேகம் அதிகரித்தது. இதனால் போலீசார் காரில் சோதனை நடத்தினர்.

அப்பொழுது அவர்கள் வந்த காரின் டிக்கியில் ரத்த கசிவு காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் டிக்கியை திறந்து பார்த்த போது உள்ளே உயிரிழந்த நிலையில் ரத்தம் வழிந்த படி ஒரு சாக்கு பை இருந்துள்ளது. அந்த சாக்குப் பையைத் திறந்து பார்த்த போது அதனுள்ளே ஒரு முள்ளம்பன்றியின் உடல் இருந்துள்ளது.

முள்ளம்பன்றி வேட்டையாடி கொல்லப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதா என சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விசாரித்த போது, அவர்கள் காரில் வந்து கொண்டிருந்தபோது குறுக்கே வந்த முள்ளம்பன்றியின் மீது கார் மோதி, காரின் சக்கரத்தில் சிக்கி முள்ளம்பன்றி உயிரிழந்து என்றும், அதனை சாக்கில் கட்டி காரில் எடுத்துக் கொண்டு வந்த போது போலீசாரின் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் உடனடியாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்காரம் உத்தரவின்படி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வன பாதுகாப்பு குழு வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் ஆனந்த், வன காப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் இறந்த முள்ளம்பன்றியை கடத்திய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் கேரளா, வயநாடு மாவட்டம் வைத்திரி காக்கா வயல்பகுதியை சேர்ந்த அதுல்குமார் (26), முனீர் (33), சிராஜூதீன் (46) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மூவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த முள்ளம்பன்றியை பறிமுதல் செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ரூ.1.25 கோடி மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.