ETV Bharat / state

உதகையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.. சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி!

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஞாயிறு விடுமுறையான இன்று, மக்கள் கூட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.. சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி!
உதகையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.. சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி!
author img

By

Published : Apr 23, 2023, 5:23 PM IST

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஞாயிறு விடுமுறையான இன்று, மக்கள் கூட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

நீலகிரி: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 23) குறைந்த அளவாக 13 டிகிரி செல்சியசும், அதிக அளவாக 20 டிகிரி செல்சியசும் வெப்ப நிலைக் காணப்பட்டது. இந்த இதமான கால நிலையினை அனுபவிப்பதற்கும், இங்குள்ள இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா காட்சி முனை போன்றவைகள் உள்ளன. அதேபோல், தோட்டக் கலைத் துறையின் கீழ் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரிப் பூங்கா உள்ளிட்டவையும் இருக்கின்றன.

இந்த நிலையில், மாவட்டத்தில் நிலவும் இதமான கால நிலை, மற்றும் இயற்கை காட்சிகள் உள்ளிட்டவற்றை அனுபவிக்க, நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 356 சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர். முக்கியமாக, விடுமுறை நாளான இன்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு குவிந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மலை ரயிலில் பயணிப்பதிலும், படகு சவாரி செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லாம்ஸ் ராக் மற்றும் டால்பின் ஹவுஸ் போன்ற பகுதிகளில் இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தற்போது படையெடுத்து வருகின்றனர். அதேநேரம், உதகைக்கும் சுற்றுலாப் பயணிகள், இன்று அதிக அளவில் வரத் தொடங்கினர். இதன் காரணமாக, உதகையில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சூழ்ந்ததால், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, உதகை ஆட்சியர் அலுவலகம் முதல் சேரிங்கிராஸ் மற்றும் பழைய தபால் நிலையம் வரை உள்ள 2 கிலோ மீட்டர் சாலையை கடக்க மூன்று மணி நேரம் ஆவதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், ஒரு நாள் விடுமுறையில் உதகை வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களை பார்க்க முடியாமல் சாலைகளில் வாகனத்திலேயே முடங்கும் நிலையும் ஏற்பட்டது.

அதேநேரம், எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு போக்குவரத்தில் இவ்வளவு சிரமம் ஏற்பட, முறையான திட்டமிடல் என்பதை உயர் அதிகாரிகள் மேற்கொள்ளாததே காரணம் என்று சக போக்குவரத்து காவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சம்மருக்கு ஊட்டி போலாமா? மலை ரயிலின் சிறப்பு சேவை தயார்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.