நீலகிரி மாவட்டம் குன்னூர், அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள ராணுவ போர் நினைவிடத்தில் காட்டெருமை ஒன்று திடீரென அப்பகுதியில் வலம் வந்தது. இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்து.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டெருமையை வனப்பகுதியில் விரட்டினர்.
பொதுமக்கள் வனவிலங்குகளை சாலையில் கண்டால், வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகள் சாலையை கடந்த உடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும்; கற்கள் மற்றும் பட்டாசுகள் கொண்டு வன விலங்குகளை விரட்ட முற்படக் கூடாது எனவும்; வனவிலங்குகளை கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களுக்கு ராணுவ அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க: பார்சல் சேவைகளை நவீனமயமாக்கும் ரயில்வே: பயணிகள் ரயில்களில் பார்சல் வேன்கள் இணைப்பு