நீலகிரி: பந்தலூர் அருகே குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானங்களை திருடி வந்ததாக தேடப்பட்டு வந்த குற்றவாளி மணி எனப்படும் சாம்பார் மணி. இவர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து மதுபான கடைகளில் மது பாட்டில்களை திருடி வந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, காவல்துறையில் இவர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. எனவே, சாம்பார் மணியை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், பந்தலூர் பகுதியில் அவர் இருக்கும் தகவலை அறிந்த போலீசார், அங்கு வைத்து அவரை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற சாம்பார் மணி போலீசாரை நோக்கி அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: இளைஞரை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் - போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் கொன்று ஆற்றில் வீசிய கொடூரம்!
அப்போது, தற்காப்புக்காக போலீசார் சாம்பார் மணியின் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தில் சாம்பார் மணியுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் போலீசார் அவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
மதுபான கடத்தலில் ஈடுபட்ட சாம்பார் மணியை நீலகிரி போலீசார் சுப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டியலின பெண்ணை தாக்கிய மாற்று சமூகத்தினர் - காவல் துறை நடவடிக்கை என்ன?