ETV Bharat / state

நடந்தே பயணம்.... லாரியில் மறைந்து வந்த வடமாநிலத்தவர்கள் - போலீசார் விசாரணை

நீலகிரி: வெளிமாநில தொழிலாளர்கள் 72 பேர் லாரியில் மறைந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

nilgiri
nilgiri
author img

By

Published : May 15, 2020, 11:25 AM IST

மத்திய அரசின் அறிவிப்பின்படி வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டி மற்றும் பேருந்துகளில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 72க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள், கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால் எர்ணாகுளத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளம் வழியாக சாலக்குடிக்கு நடந்தே வந்துள்ளனர்.

பின்னர், அவ்வழியாக வந்த ஒடிஸாவைச் சேர்ந்த லாரியில் கர்நாடக மாநிலம் மைசூர் வரை தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து, அந்த லாரி ஓட்டுநர் வடமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தமிழ்நாடு - கர்நாடக எல்லையான முதுமலை வனப்பகுதியை கடக்கும்போது சோதனைச் சாவடியில் ஈடுபட்ட காவல்துறையிடம் 72 தொழிலாளர்களும் சிக்கினர்.

இதையடுத்து, அவர்கள் லாரியிலிருந்து இறக்கிவிடப்பட்டு, பின்னர் காவல்துறை தரப்பில் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து முதுமலை வனப்பகுதிக்கு வந்த வாருவாய்த் துறையினர், காவல்துறையிடம் சிக்கிய 72 தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு பணிக்காக கேரளா வந்துள்ளனர். கரோனா பாதிப்பின் காரணமாக தங்களது சொந்த ஊருக்கு செல்ல கேரள அரசிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. கையில் இருந்த பணம் முழுவதும் செலவானதால், நடந்தே செல்ல முடிவெடுத்துள்ளனர். அவ்வாறு வந்தபோது லாரி மூலம் வந்து உங்களிடம் சிக்கிக்கொண்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறையினர் 72 தொழிலாளர்களுக்கும் உணவுகளை வழங்கினர். வெளிமாநில தொழிலாளர்கள் 72 பேர் லாரியில் மறைந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேர்வு மையங்கள் கணக்கெடுக்கும் பணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.