ETV Bharat / bharat

'"மகாராஷ்டிரா முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி யாரை தேர்வு செய்தாலும் அதற்கு உடன்படுவேன்"-ஏக்நாத் ஷிண்டே ஒப்பன் டாக்! - EKNATH SHINDE

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக திருப்திகரமாக பணியாற்றியதாகவும், தாம் பொதுவான மனிதர்தான் என்றும் இடைக்கால முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே (Image credits- ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2024, 6:37 PM IST

தானே: மகாராஷ்டிரா குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவு எடுத்தாலும் அதுதான் சிவசேனாவின் இறுதியான முடிவு என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் முதலமைச்சராக யார் பதவி ஏற்பார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், பாஜக தரப்பில் தேவேந்திர பட்நாவிஸை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று போனில் பேசினேன். நான் ஒரு தடையாக இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளேன். மகாயுதி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் (பிரதமர்) முடிவு எடுங்கள். அதுவே எங்களுக்கு இறுதியான முடிவாக இருக்கும். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மகாயுதி அரசு மேற்கொண்ட பணிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே நான் திருப்தியாக உள்ளேன்.

இதையும் படிங்க: 'கூட்டணிக்கு காசு'.. அந்த அவசியம் அதிமுகவுக்கு இல்லை - உதயநிதிக்கு ஜெயக்குமார் பதிலடி!

நான் ஒரு பொதுவான மனிதன். எனவே பொதுமான மனிதர்களை சந்திக்கும்போது அங்கு தடை ஏதும் இருக்காது. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், பொதுமக்களின் பாதிப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளேன். நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியாகும். நாங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஓய்வின்றி உழைத்தோம். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை மகாராஷ்டிரா மக்களுக்காக உழைப்பேன். இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். மகாயுதி கூட்டணி தலைவர்கள் புதுடெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இறுதி முடிவு எடுக்கப்படும்," என்றார். ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு வெளிப்படையாக கூறியதன் அடிப்படையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வில் சிக்கல் இருக்காது என்று பாஜக மேலிடம் கருதுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.