தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கடந்த 14 நாட்களாக விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், மக்களை அச்சுறுத்தியும் வந்த காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதனையடுத்து வாகனம் மூலம் ஏற்றி முதுமலை பகுதிக்கு யானை கொண்டு வரப்பட்டது.
முதுமலை ஒட்டியுள்ள புதிய இடமான அசுரமட்டும் என்னும் பகுதியில் இந்த யாணை விடப்பட்டது. இந்த யானையை வனத்துறை அலுவலர்களும், வன காவலர்களும் கண்காணித்துவருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இப்பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளால் மனிதர்கள் இறப்பு அதிகரித்துவந்த நிலையில் இந்த யானையை இங்கு கொண்டு வந்துவிட்டது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.