நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 868 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 868 வாக்கு சாவடிகள் உள்ளன. அதில் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச் சாவடிகளை வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீலகிரியில் இது வரை தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ. 2 கோடியே 46 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல் தொடர்பாக அறுபது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வாக்கு சாவடிகளுக்கு வந்து செல்ல அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வர தடை விதிக்கபட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வன விலங்கு நடமாட்டம் உள்ள கிராமங்களில் மாவோயிஸ்ட் தடுப்பு படையினர், வனத்துறையினர் ஆகியோரின் பாதுகாப்பில் வாக்காளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக புகார் மனு