நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வனப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள 7 அம்மன் கோயில்களில் முதல் கோயிலான மசினக்குடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கட்கிழமை (மார்ச்2) இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகத்திலிருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் தேர்திருவிழா முடிந்தும் வனப்பகுதியில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது. மேலும் வனப்பகுதியில் ஆங்காங்கே நெகிழி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து சோலூர் பேரூராட்சி நிர்வாகம், கோயில் செயல் அலுவலருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. நீலகரி நெகிழி இல்லாத மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைவு!