ETV Bharat / state

'7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கவேண்டும்' - பட்டியல் இனம்

நீலகிரி: பட்டியல் இனப் பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்திடவும் சான்றிதழ் பெறவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

tamilnadu-makkal-munneetra-kazhagam-protest
tamilnadu-makkal-munneetra-kazhagam-protest
author img

By

Published : Nov 26, 2019, 8:02 AM IST

தமிழ்நாட்டில் பட்டியல் இன பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்திடவும் சான்றிதழ் பெறவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லுகிற கட்சிகள், தேர்தல் முடிந்த பின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிடுகின்றனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் மக்கள் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்துப் போராடினார்கள்.

அதன்படி கடந்த 15 நாட்களாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கறுப்பு உடை அணிந்து போராடி வருகின்றனர். எனவே இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: தொலைக்காட்சி சின்னம்: புதிய தமிழக கட்சி கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

Intro:OotyBody:உதகை 25-11-19

தமிழகத்தில் பட்டியல் இன பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்திடவும் சான்றிதழ் பெறவும் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உதகை ஏ.டி.சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்...

தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல வேளாளர் அரசாணையை நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லுகிற கட்சிகள் தேர்தல் முடிந்த பின்பு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரிக்கை கிடப்பில் போட்டு விடுகின்றனர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கிறது இந்த நிலையில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதி யில் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்து போராடினார்கள்.

அதன்படி கடந்த 15 நாட்களாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு உடையில் இருக்கின்றோம் இதன் மூலம் அரசுக்கு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உணர்வை வெளிப்படுத்துகிறோம் எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தேவேந்திரகுலவேளாளர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.