நீலகிரி: கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அரசு அளிக்கத் தவறியதால் அதிதீவிரமாக கோமாரி நோய் பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்டிற்கு இருமுறை கால்நடைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் தற்போது போடப்படாமல் விடப்பட்டுள்ளன.
கரோனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை அரசு அளிக்கத் தவறியதால், நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாகப் பரவி வருகிறது.
இவை அருகில் உள்ள மற்ற கால்நடைகளுக்கும் பரவி வருவதால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்து வருகிறது. இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.