நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக் கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சிம்ஸ் பூங்கா. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசனில் பழக்கண்காட்சி நடைபெற்று வருகிறது.
மேலும் பல வண்ண உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பல வண்ண மலர்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான முதற்கட்ட பணியான மண் சீர் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பூச்செடிகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகள் சிம்ஸ் பூங்காவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: உதகை மலர்க் கண்காட்சிக்காக மலர் நாற்றுகள் நடவும் பணி தொடக்கம்!