நீலகிரி மாவட்டம் பர்லியார் வனப்பகுதிகளிலும், சாலையோரத்திலும் செங்காந்தள் பூ பூத்துள்ளது. தற்போது இந்தப் பூ சாலையோர செடிகளில் பூத்து வண்ணமயமாகக் காட்சி தருகின்றது. சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் ரம்மியமாகப் பூத்துக் குலுங்கும் இம்மலர், காண்போரைக் கவர்ந்துள்ளது. இதன் அழகை மக்கள், சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
செங்காந்தளின் நன்மை
தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் மலர் மூலிகை குணம் உடையது. செங்காந்தள் என்பது காந்தள் அல்லது கார்த்திகைப் பூ என்பது போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
செங்காந்தள் மலர் உயர்ந்த மலைகளிலும், மலை முகடு, சரிவுகளிலும் அதிக அளவு காணப்படும். ஆப்பிரிக்கா, ஆசியாவை தாயகமாகக் கொண்ட இந்த மலர் மருத்துவ குணம் கொண்டது.
இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து தேள் கடி, வாதம், மூட்டுவலி, தொழுநோய், பேதி, பால்வினை நோய்கள், பாம்பு கடி போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூ ஏழு நாள்கள் வரை வாடாமல் இருக்கும்.