ETV Bharat / state

நீலகிரியில் கரோனா பரிசோதனை தொடக்கம்

நீலகிரி: குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில் கரோனா பரிசோதனை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

கரோனா பரிசோதனை தொடக்கம்
கரோனா பரிசோதனை தொடக்கம்
author img

By

Published : Apr 26, 2020, 12:06 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் பாஸ்டியர் நிறுவனம் 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 25இல் தொடங்கப்பட்டது. அந்நிறுவனத்தில் முதலாவதாக வெறிநாய் கடி மருந்து தயாரிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது ரேபிஸ் நோய் கண்டறியும் மையமாக செயல்படுவதுடன் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு கரோனா பரிசோதனை மையம் அமைக்க நீலகிாி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வுக்குப் பிறகு மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் பணிகள் தொடங்கப்பட்டன.

கரோனா பரிசோதனை தொடக்கம்

அதையடுத்து பணிகள் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி நேற்றிலிருந்து கரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது. ஒரு நாளில் 80 மாதிரிகள், 6 மணி நேரத்தில் பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 45 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதற்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் கரோனா மாதிரிகள் கோயம்புத்தூருக்கு எடுத்துச் சென்று பரிசோதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: குன்னூரில் ராணுவ பயிற்சி வீரர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.