ETV Bharat / state

தந்தை, மகனை கொன்ற யானையை பிடிக்கும் பணி தீவிரம்

author img

By

Published : Dec 15, 2020, 3:15 PM IST

நீலகிரி: யானை தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியில் சுற்றித் திரியும் யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

யானையை பிடிக்கும் பணிகள்யானையை பிடிக்கும் பணிகள் தீவிரம் தீவிரம்
யானையை பிடிக்கும் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம் கண்ணம்வயல் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து (65) என்பவர், டிசம்பர் 11ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து கடைக்கு செல்லும் வழியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

அதைப் போல கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி பத்தாம் லைன் பகுதியில் டிசம்பர் 13ஆம் தேதி மாலை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பிரகாஷ் (22) என்ற இளைஞரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற பிரகாஷின் தந்தையும் ஊராட்சி கவுன்சிலருமான ஆனந்தராஜையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் தந்தையும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதவாறு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று (டிச.15) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, அரசு அலுவலர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அப்போராட்டம் கைவிடப்பட்டது. டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் சுற்றித்திரியும் யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.

யானையை பிடிக்கும் பணிகள் தீவிரம்

இதையடுத்து முதற்கட்டமாக முதுமலையில் இருந்து கொம்பன், வசிம் என்ற கும்கி யானைகளும் டாப்சிலிப் முகாமில் இருந்து காட்டு யானையை பிடிப்பதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற கலிம் என்ற யானையும் வரவழைக்கப்பட்டுள்ளன. மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிப்பதற்காக மூன்று மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் உலா வரும் யானையை கண்டுபிடிக்க 4 வனக்குழு, 2 டிரோன் கேமிரா தயார் நிலையில் உள்ளன.

இதையும் படிங்க: பொள்ளாச்சி ஆனைமலைப் புலிகள் காப்பகம்: வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.