ETV Bharat / state

சிறுத்தைகள் சண்டையால் குட்டி சிறுத்தை உயிரிழப்பு - small leopard killed in fight between leopards in coonoor

நீலகிரி: குன்னூர் அருகே இரண்டு சிறுத்தைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் இரண்டு வயது பெண் சிறுத்தைக் குட்டி உயிரிழந்தது.

குட்டி சிறுத்தை உயிரிழப்பு
குட்டி சிறுத்தை உயிரிழப்பு
author img

By

Published : Mar 16, 2021, 1:56 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.

இந்த நிலையில் குன்னுார் அருகே உள்ள சோகத்துரை வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வன விலங்குகளின் உறுமல் சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தபோது, இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று அங்கு இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதன்பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் குட்டி சிறுத்தை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் அதிகரிக்கும் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.