உதகை அருகே மசினகுடி சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இந்தச்சூழலில் மசினகுடி சரகத்திற்கு உட்பட்ட ஜகிலிகடவு வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இறந்த நிலையில் குட்டியானை கிடப்பதைப் பார்த்த காவலர்கள், அதுகுறித்து உயர் அலுவலர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவக் குழு உயிரிழந்த குட்டியானைக்கு உடற்கூறாய்வு செய்தனர். பின்னர் உயிரிழந்த யானைக்குட்டியானது பிறந்து ஒரு மாதமே ஆனதாக தெரிவித்தனர்.
யானைக்குட்டி உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தந்தம் திருடி விற்க முயன்ற நால்வர் கைது!