நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது சாரல் மழையும் இரவு நேரங்களில் கன மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று இரவு முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மழை காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது. சாலைகளில் குளம் போல மழை நீர் தேங்கியிருப்பதோடு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
இந்நிலையில், உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவர்கள்!