நீலகிரி: குன்னூர் ஒய்எம்சிஏ பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இன்று (ஏப்ரல் 29) காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஆசிக் (26) என்ற இளைஞர், அந்த மாணவியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபோதையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டல்